சென்னை மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் அருகே பெண் தலை நசுங்கி பலி*
சென்னை மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவரஞ்சனி இவர் தனியார் மாலில் பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன இரவு பணி முடித்துவிட்டு மாத்தூர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவில் சாலையே கடப்பதற்காக நின்று கொண்டிருந்த பொழுது மாதவரம் பகுதியில் இருந்து தார் லோடு ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி மாதவரத்தில் இருந்து வந்து மீண்டும் மாதவரம் செல்வதற்காக திரும்ப முற்பட்ட பொழுது லாரியும் முன் சக்கரம் சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்த சிவரஞ்சினியின் வாகனத்தின் மீது மோதி சுமார் 10 அடி நீளத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் சத்தம் போடவே லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று உள்ளார் இதில் முன் பக்கத்தில் சிக்கிக்கொண்ட சிவரஞ்சனி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார் இதனை அடுத்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுத்துறை காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்தில் சென்ற செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுத்துறை காவலர்கள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
நள்ளிரவில் பெண் ஒருவர் தலை நசிங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் காட்டுதீ போல் பரவியது இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது
