எங்களது உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது-வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கூடுதல் தொகுதி கோரப்படுமா?என்ற கேள்விக்கு எம்.பி மாணிக்கம் தாகூர் சிவகாசியில் பேட்டி…..வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனவும் சிவகாசியில் பேட்டி.
சிவகாசியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி விழாவில் பங்கேற்ற விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது,
எம்.ஜி.ஆர் துவங்கிய அதிமுக கட்சி, ஜெயலலிதாவள் 40க்கு 40 தொகுதி வெற்றி பெற்ற கட்சி அமித்ஷா அதிமுக கட்சியாக மாறிவிட்டது. கூட்டத்தில் மற்ற கட்சிகளின் 4 பேர் கொடியை கொண்டு வந்தால் கூட கூட்டணி வந்துவிடும் என்ற நிலைக்கு அமித்ஷா அதிமுக தள்ளப்பட்டுள்ளது, எடப்பாடி பழனிச்சாமியின் கரங்களால் அதிமுகவிற்கு முடிவுரை எழுதப்படுகிறது, இந்த நிலைக்கு அதிமுக வந்ததை கண்டு ஒவ்வொரு தொண்டருக்கும் வலியை ஏற்படுத்தும். மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அதிமுக கட்சி தவறான கைகளுக்கு சென்று விட்டது. யாராவது கைகளில் கொடியை ஏந்தி வந்தால் கூட கூட்டணி வந்துவிட்டது என நினைக்கும் தலைமை கையில் கட்சி சிக்கிக் கொண்டுள்ளது.
அமித்ஷா அதிமுகவிற்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவு காலம் எழுத்திக்கொண்டிருக்கிறார். மக்கள் மத்தியில் அதிமுக நம்பகத்தன்மையை இழந்துள்ளது.
1996ல் படு தோல்வியடைந்தபோது கூட அதிமுக 27 சதவீதம் வாக்கு பெற்றது, ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 21 சதவீதமாக குறைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அமித்ஷா செய்த அட்டூழியம் காரணமாக அதிமுகவின் வாக்கு வேறு எங்கோ செல்கிறது. அதிமுகவை அமித்ஷா அதிமுக என மாற்றி அதிமுகவை முடித்து வைத்து வைக்கின்ற வேலையை அமித்ஷா செய்கிறார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என தெரியவில்லை. விஜய் ரசிகர் மன்றம், அரசியல் கட்சியாக மாறியுள்ளதா? என்பது வாக்கு பெட்டியை திறந்து பார்த்தால் தான் தெரியும். அதிமுக அமித்ஷாவிடம் சரண்டர் ஆனதை பார்க்கும்போது களத்தில் எதிரி இல்லாத களமாக மாறி உள்ளது. இந்தியா கூட்டணிக்கு எதிராக ஏதோ ஒரு கட்சி உருவாகும் ஆனால் அது அதிமுகவாக இல்லை எனபது மட்டும் தெரிகிறது. பீகார் தேர்தலை சந்திக்க இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. பீகாரை பொருத்தவரை மோடி எதிர்ப்பலையாக மாறியுள்ளது. பீகாரில் வேலையில்லா திண்டாட்டம் தேர்தலில் எதிரொலிக்கும்.
2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகிப்பது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் அவசியம் எடுத்துரைப்பேன். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கூடுதல் தொகுதி கேட்கப்படுமா? என்ற கேள்விக்கு;
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கூட்டணிக்காக பல தியாகங்களை செய்துள்ளது, எனவே எங்களது உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது. எங்களது உரிமையை கோருவதற்கு சரியான நேரம் வந்துவிட்டது, கூட்டணி கட்சிகளுக்காக தொடர்ந்து பல தியாகங்களை செய்துள்ளதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம் என்றார்.