திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் நகர் பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான வாளவாய்க்கால், விளமல், திருமதிகுன்னம், கமலாபுரம், கண்கொடுத்தவணிதம், அடியக்கமங்கலம், ஆண்டிபாளையம், கோமல், மாவூர், மாங்குடி, அத்திசோழமங்கலம், ஆண்டாங்கரை, லட்சுமிநாராயணபுரம், வடபாதிமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் குறைந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
