தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கடையூர், பொறையார், தரங்கம்பாடி, தில்லையாடி ,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென தற்போது மழை பெய்து வருகிறது இந்த மழை சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version