“விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் ?” – சீமான் கேள்வி

திருநெல்வேலி: கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படாதது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக கூட்டணியில் இணையாவிட்டால், விஜய் மீது நடைபெறும் சிபிஐ விசாரணை தீவிரமடையும் என எனக்கு தோன்றுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் நிதி, அவர்களுக்கு சிபிஐ விசாரணையில் எதிராக பேசாதபடி தடுக்க முயன்ற நடவடிக்கையாக இருக்கலாம்,” என தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சீமான் கூறியதாவது :
“கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நிகழ்வுக்கு முக்கிய காரணமாக இருந்த விஜயின் பெயர் எப்ஐஆரில் சேர்க்கப்படவில்லை. ஏன்? இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். சிபிஐ விசாரணை நியாயமாக நடைபெறுமா அல்லது விஜயை பாதுகாக்கப் போகிறார்களா என்பது மக்கள் மனதில் கேள்வி எழுப்புகிறது.”

“மாநில போலீஸ் விசாரித்தபோது முன்ஜாமின் கேட்ட ஆனந்த், சிபிஐ விசாரணை வந்ததும் அதனைத் திரும்பப் பெற்றது ஏன் ? இது விஜயுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக காட்டுகிறது.”

“நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு பிப்ரவரி 7ஆம் தேதி திருச்சியில் நடைபெறும். அந்த மாநாட்டில் அனைத்து சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள். அது ஒரு திருப்புமுனை என்று நினைக்க வேண்டாம்; எங்கள் திருப்பம் எங்களது சிந்தனையில்தான் உள்ளது. மக்கள் மனநிலை மாறியால் எந்த பெரிய தலைவரையும் மக்கள் தோற்கடிக்க முடியும்.” என்று சீமான் வலியுறுத்தினார்.

Exit mobile version