“அணில் ஏன் அங்கிள், அங்கிள் என்று கத்துகிறது? அது ஜங்கிள், ஜங்கிள் என்று தான் கத்த வேண்டும். போன மாநாட்டில் சிஎம் சாராக இருந்தவர், இந்த மாநாட்டில் எப்படி அங்கிள் ஆனார்?” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
“அதிமுக யாரிடம் இருக்கிறது என்று, அவர் நான்கரை ஆண்டுகள் முதல்வராக இருந்தபோது ஏன் கேட்கவில்லை? நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலும் லஞ்சமும் ஒரு நிமிடத்தில் ஒழியும். பதவிக்காகவும், கோடி கோடியாக பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திற்காகவும் அரசியலுக்கு நான் வரவில்லை.
பிப்ரவரி 7ம் தேதி திருச்சியில் நான் மாநாடு நடத்துகிறேன். அப்போது கூட்டம் எப்படி நடத்த வேண்டும், உரையாற்ற வேண்டும், எத்தனை லட்சம் பேர் கூட வேண்டும் என்பதை அங்கே வந்து பாருங்கள்,” என்றார்.
நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததைக் குறித்து,
“தேர்தல் நெருங்குகிறது என்பதற்கான சிக்னல் தான். விநாயகர் நம்ம தெய்வம்; அவருக்கு வாழ்த்துக்கள் சொல்வது இயல்பான விஷயம்தான். தமிழனின் ஆட்சி காலத்தில் அவர் தான் தெய்வமாக இருந்தார். அதில் புதிதாக ஒன்றும் இல்லை,” எனக் கூறினார்.