நெல்லையில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் எடப்பாடியாரின் உருவப்படத்தை அடித்து அவமானப்படுத்தியதை கண்டித்து அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை. கணேசராஜா பத்திரிகையாளர் சந்திப்பில் ஆவேசமாக பேசியது:-
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகையை இழிவாக பேசிய எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து அவரது உருவப்படத்திற்கு காலனி மாலை அணிவித்து துடைப்பத்தால் அடித்து போராட்டம் நடத்தினார். அதற்கு பதில் அளிக்க விதமாக நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது….
நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியினரிடம் காரணம் கேட்டால் அவர்கள் எங்களுடைய பொதுச் செயலாளர் அவர்கள் மாநில தலைவர் செல்வப் பெருந்தகையை தரக்குறைவாக பேசியுள்ளார் என்று கூறுகின்றனர்.
அரசியல் கட்சியினர் செய்யக்கூடிய தவறுகளை அரசியல்வாதிகள் வெளியில் கொண்டு வருவது அரசியல் மாண்பு. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நெல்லை காங்கிரஸ் கட்சியினர் அவமானப்படுத்தி உள்ளனர். குறைகளை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது. எனக்குத்தானே விளம்பரம் தேடுவதற்காக காங்கிரஸ் கட்சியினர் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர்.
மக்களை திசை திருப்புவதற்காக இல்லாத குறைகளை சொல்லி காங்கிரஸ் கட்சியினால் நாடகமாடுகின்றனர். செல்லப் பெருந்தகை பல கட்சிக்கு சென்று வந்தவர் தானே அதில் என்ன தவறு இருக்கிறது. அவர் மீது பல வழக்குகள் உள்ளன. இவர்கள் இதேபோன்று செய்து கொண்டே இருந்தால் அதிமுகவினர் சும்மா இருக்க மாட்டோம். தமிழர்களை கொத்துக் கொத்தாக கொலை செய்த ராஜபக்சேவிடம் சென்று விருந்து சாப்பிட்டு வந்த காங்கிரஸ் கட்சியினர் திருமாவளவன் திமுகவினர் இவர்கள்.
எடப்பாடி பழனிச்சாமி அதைத்தான் கேள்வி கேட்கிறார். அதை பதில் கூற முடியாமல் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். வெட்டி பேச்சு வீண் பேச்சு எல்லாம் இதையெல்லாம் விட்டு விடுங்கள். அவதூறான வேலைகளை எல்லாம் விட்டுவிடுங்கள். இனிமேல் எடப்பாடி பழனிச்சாமியை பற்றி யாராவது தவறாக பேசினால் உங்களுக்கு தங்க பாட புகட்டப்படும். அதிமுக தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நெல்லை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் இறந்த ஜெயக்குமாரை கொலை செய்தவர்களை ஏன் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மீது விசுவாசமாக இல்லை என்று செல்வ பெருந்தகை என்று கூறியுள்ளார் என்ற கேள்விக்கு…. சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் இவர்கள் அத்தனை பேரின் தொந்தரவுகளையும் தாங்கிக் கொண்டு இயக்கத்தை வழிநடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர் விசுவாசமாகத்தான் இருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழிவு படுத்தியவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று செல்வ பெருந்தகை விமர்சித்துள்ளார் என்ற கேள்விக்கு. அதற்கு அப்போதே கண்டனம் தெரிவித்துவிட்டோம். கூட்டணிகள் மாறும். இதெல்லாம் காலங்காலமாக நடந்து வரக்கூடியது தான்.