மாணவிகளுக்கான “அகல் விளக்கு” பயிற்சி ஏன்..?

தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கான இணைய வழி குற்றங்களிலிருந்து பாதுகாப்பு வழிகாட்டி “அகல் விளக்கு” பயிற்சி நிகழ்ச்சி ஆசிரியர்களுக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சதீஸ் கலந்து கொண்டு அகல் விளக்கு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது தருமபுரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய பாலினங்கள் எந்த அளவிற்கு குறைவா இருக்கு அதன் மூலம் சமூகத்தில் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் அதை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கு அப்படின்றதை இங்கு நான் பதிவு செய்யணும் என்பதற்காக வந்திருக்கிறேன்.

ஏற்கனவே 2023,24, 25 அதனுடைய தரவுகளை எடுத்து பார்க்கும் பொழுது பாலினங்கள் ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு எத்தனை பெண் குழந்தைகள் பிறந்து கொண்டிருக்கிறது. எப்படி பாலின சமத்துவத்தை நாம் அடைய முடியும். கருவிலே ஆணா, பெண்ணா கண்டறிவது இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவது குறித்தும், மாணவிகளின் பெற்றோர்களை விட ஆசிரியர்களுக்கே மாணவர்களை வழிநடத்த அதிக அக்கறை உள்ளது என்று பல்வேறு விழிப்புணர்வு மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதா மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version