திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியாராக பணிபுரிந்தபோது 1மாதத்தில்1000குளங்களை வெட்டி கின்னஸ் சாதனை

கன்னியாகுமரி மாவட்டம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியாராக பணிபுரிந்த போது ஒரே மாதத்தில் ஆயிரம் குளங்களை வெட்டி கின்னஸ் சாதனை படைத்த பிரதாப் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 வது ஆட்சியராக பதவி ஏற்று கொண்டார் – திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியராக இருந்து குமரி மாவட்ட ஆட்சியராக இடம் மாற்றுதல் பெற்று வந்து உள்ளார் – அவருக்கு அதிகாரிகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் செய்தியாளர்களிடம் பேசும் போது மாவட்டத்தை முழு வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற்றிட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் குமரி மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் வேண்டுகோள் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிகமாக இருக்கின்றன வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தரும் மாவட்டமாக இது திகழ்கிறது அவர்களுக்கு தேவையான பல்வேறு முன்னெடுப்புகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும் அவற்றை மேலும் மேம்படுத்தும் வகையில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் துறை சார்ந்த அலுவலர்களோடு ஆலோசிக்கப்படும் மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தரும் மாவட்டமாக இந்த மாவட்டம் திகழ்ந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அவர்களோடு ஒருங்கிணைந்து அரசுக்கு பரிந்துரை செய்து அவற்றுக்கான தேவைகளை பெற்று மீனவ மக்களின் மேம்பாட்டிற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் விவசாயிகள் நெசவாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த பணிகளை செய்யும் அனைத்து மக்களின் கோரிக்கைகளையும் நம்முடைய மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அரசுக்கு பரிந்துரை செய்து அந்தப் பணிகளும் விரைவாக நிறைவேற்றப்படும் என்றும் நம்முடைய மாவட்டத்தின் சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள் மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் இங்குள்ள பொதுமக்கள் அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டு அதற்கு ஏற்ப பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்

கன்னியாகுமரி மாவட்டத்தினுடைய ஆட்சியராக பணிபுரிந்து வந்த அழகு மீனா பணியிடம் மாற்றப்பட்டு க மாவட்டத்தின் 54 வது கலெக்டராக பிரதாப் பிரதாப் விருதுநகர் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் எளிய குடும்பத்தில் பிறந்து கின்னஸ் சாதனை படைத்தவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய போது ஒரே மாதத்தில் ஆயிரம் குளங்களை வெட்டி அதற்கான கின்னஸ் சாதனையை பெற்ற அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்து வந்தார் இன்று முதல் அவர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்று கொண்டார் ஏற்கனவே தமிழக முதலமைசரின் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

Exit mobile version