கலைஞர் முதல்வராக இருந்த போது MGR-ன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வரவிடாமல் தடை செய்தார்கள் அதேபோன்று தற்போதும்DMKஎன குற்றம்

கலைஞர் முதல்வராக இருந்த போது எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வரவிடாமல் தடை செய்தார்கள் அதேபோன்று தற்போதும் திமுக நடந்து கொள்கிறது என கன்யாகுமரி முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினரும் தற்போது தவெக நிர்வாகியுமான முத்து கிருஷ்ணன் குற்றம் சாட்டினார்

தலைவர் விஜயை அரசியலுக்குள் நுழைய விடாமல் தடுக்க பல்வேறு சதி நடைபெற்று வருகிறது. கரூரில் பிரச்சாரத்திற்கு வரும்போது தடை ஏற்படுத்தினார்கள் குறிப்பாக வேண்டுமென்றே சில செயல்கள் அங்கு நடத்தப்பட்டதால் தான் இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்பட்டது. தற்போது ஜனநாயகம் திரைப்படம் வெளியிடக்கூடிய இந்த நாளில் படத்தை வெளியே வரக்கூடாது என்பதற்காக சில அரசியல் சக்திகள் வேண்டுமென்றே தடையை ஏற்படுத்தி உள்ளனர் இதற்கு உடனடியாக சென்சார் போர்டில் பணிபுரியும் சிலரும் உட்படுத்தி உள்ளனர். தற்போது விஜயின் ஜனநாயகம் திரைப்படம் வெளிவராமல் தடுக்க அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டு உள்ளனர். திமுக சார்பில் பராசக்தி படமும் விஜயின் ஜனநாயகன் படமும் வெளிவர உள்ளது. இரண்டு படங்களும் ஒரே நாளில் வரக்கூடாது என்பதில் சிலர் முட்டுக்கட்டையாக உள்ளனர். இதற்கு ஒரு சில அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு வேண்டுமென்றே படம் வெளிவராமல் இருக்க தடை செய்து வருகின்றனர் சட்டப்படி இது செல்லக்கூடியது அல்ல படம் வெளிவராமல் இருக்க பாஜகவும் திமுகவும் பின்னணியில் உள்ளன. பாஜகவை விட திமுகவை இதில் முனைப்பு அதிகம் காட்டுகிறது. விஜயின் படம் வெளி வந்தால் அவரது செல்வாக்கு கூடும் என்பதால் அதைப் பார்த்து அஞ்சுகின்றனர். தமிழக முதல்வர் தமிழக வெற்றி கழகத்தை பார்த்து மிகுந்த அச்சத்தில் உள்ளார். திமுகவிற்கு எதிரான கருத்துகள் படத்தில் இடம்பெறலாம் ஆகவே அதன் அச்சத்தின் வெளிப்பாடாக படத்தை தடை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். கலைஞர் முதல்வராக இருந்த போது எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வரவிடாமல் தடை செய்தார்கள் அதேபோன்று தற்போதும் திமுக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார்

Exit mobile version