மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு : தமிழ்நாட்டில் இன்று மழை எப்படி ? – வானிலை மையம்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காணப்பட்டது. பின்னர், இன்று காலை 5.30 மணிக்கு அது வலுவிழந்து, வடக்கு சட்டீஸ்கர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலவுகிறது.

இதன் தாக்கம் காரணமாக:

04.09.2025 முதல் 07.09.2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

08.09.2025: ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

09.09.2025: கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

10.09.2025: தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை நிலவரம்

செப்டம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை. ஆனால் சில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவு செய்யப்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை

இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸ், குறைந்தபட்சம் 27-28° செல்சியஸ் வரை இருக்கும்.

நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸ், குறைந்தபட்சம் 27° செல்சியஸ் இருக்கும்.

Exit mobile version