விழுப்புரம் வள்ளலார் சத்திய தர்மசாலை சார்பில் ஆயிரம் 1000 குடும்பங்
களுக்கு நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம் வள்ளலார் சத்திய தர்மசாலை சார்பில் ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி
ஆயிரம் 1000 நபர்களுக்கு
சிறப்பு அன்னதானம் வழங்கும் மக்கள் நலத்திட்டம்…
வடலூரில்
திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் திருக்கரத்தால் கடந்த 1867 ஆம் ஆண்டு,
வைகாசி 11
ஆம் தேதி, உலக வரலாற்று அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் அணையா அடுப்பு எனும் சத்திய தருமச்சாலையை துவக்கி, சாதி, மதம், இனம், இனம், நிறம், நாடு, தேசம், மொழி என்கிற வேறுபாடு இல்லாமல் பசித்தவர்களுக்கு தினசரி மூன்று வேளயும் தொடர்ந்து உணவு அளிக்கும் ஜீவகாருணிய திருப்பணி துவக்கி அருளிய 160 வது ஆண்டு திருநாளையொட்டி ….
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, தெற்கு ரயில்வே காலனியில் இயங்கிவரும் வள்ளலார் சத்தியதருமச் சாலை அன்பர்கள் சார்பில்,
ஆயிரம் 1000 குடும்பங்களுக்கு ஐந்து 5கிலோ அரிசி, ஆயிரம் 1000 நபர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும்
மக்கள்
நலத்திட்டம் சிறப்பாக நடைபெற்றது ..
பயனாளிகளுக்கு
மட்டுமே
5 கிலோ அரிசியும் … ஆயிரம் நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சியினை ஏற்பாடு
செய்திருந்த விழுப்புரம் வள்ளலார் சத்திய தருமச்சாலை நிறுவனர் ஜெய. அண்ணாமலை அனைவரையும் வரவேற்று பேசினார்.
அப்ரைசர் பெ.சிவக்குமார் தலைமை தாங்கினார்.
மக்கள் நலத்திட்டதை விழுப்புரம் முன்னாள் நகர சேர்மன் இரா. ஜனகராஜ்,
க.கோபி
சிகாமணி,
S.R. செல்லமுத்து, செ.தினேஷ், சுகம்
E. பாலாஜி, வேகம்பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர் …
நெடி கிராமம் சா.பலராமன், அதனூர் இரா. சரவணபவன், P. பிரேம்ராஜன், வழக்கறிஞர் பொய்கை V.சங்கர், பூவரசன்குப்பம் மு. வேல்முருகன், மெக்கானிக் ராமலிங்கம், டி.வி. மெக்கானிக்
A.சங்கர், கால்நடைத்
துறை வெங்கடேசன், தாமரைக்குளம் வைரமணி ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள்…
