திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்வில் நலத்திட்ட உதவி

திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை நகர் மன்ற தலைவர் வழங்கினார்.

திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனா பிரியா செந்தில் தலைமையில் கொண்டாடப்பட்டது
இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத்தை சேர்ந்த அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து திருவாரூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை நகர மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் செந்தில் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Exit mobile version