சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள வேலுநாச்சியார் மணி மண்டபத்தில் உள்ள குயிலி சிலைக்கு அரசியல் கட்சியினர் சமுதாய மக்கள் பல்வேறு அமைப்புகள்
குயிலியின் திருவுருவச்சிலை மற்றும் நினைவுத்தூணிற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதே போன்று சமுதாய அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் சமூக நல்லிணக்க பேரணி நடத்தி நினைவிடம் வந்து குயிலியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர் பின்னர். திடீரென சன்பரிவார அமைப்புகள் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்து கோஷமிட்டனர் . வரலாறுகள் மறைக்கப்படுவதாக ஆர் எஸ் எஸ்-க்கு எதிராக குற்றம்சாட்டி கண்டனம் . முழக்கமிட்டனர்.
ஆர்எஸ்எஸ் கும்பலும் பிஜேபி கும்பலும் ஜாதி வெறி கும்பலும் வரலாறுகளை மறைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி பேசினர் . கீழடி நாகரீகம் என்பது சங்க கால தமிழர்களின் நாகரீகம் . கீழடியை ஆய்வு செய்த அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழர் பாரம்பரியத்தை ஆய்வறிக்கையாக மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளார் அந்த ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட மறுப்பது ஏன்? வரலாறுகளை மறைக்காமல் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . தமிழகத்தை சீர்குலைக்க, ஆர் எஸ் எஸ் போன்ற கும்பல்களின் திட்டங்களை முறியடிப்போம் என்று கோஷமிட்டனர் இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது டிஎஸ்பி அமலஅட்வின், தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.