திமுக கூட்டணியில் நீடிப்போம் – விசிக திட்டவட்டம்,தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இடம்பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), அக்கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாக உறுதியளித்துள்ளது. வணிகர் அணி மாநில துணை செயலாளர் விஜயரங்கன் பேட்டி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற விசிக வணிகர் அணியின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சி மாநில வணிகர் அணி செயலாளர் விஜயரெங்கன் அப்போது பேசிய அவர் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மை பெறாத சூழலில், விசிக அக்கூட்டணிக்கு முழு ஆதரவை வழங்கியது. இடையில் எழும் பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, விசிக என்றும் திமுக கூட்டணியிலேயே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியில் பங்கில்லை: தங்கள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஏற்கனவே அறிவித்தபடி, திமுக ஆட்சியில் விசிக பங்கெடுக்கப் போவதில்லை என்றும், வெளியில் இருந்து முழு ஆதரவை வழங்கும் என்றும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. விசிக மற்ற கட்சிகளுடன் இணையப் போவதோ அல்லது நிர்வாகிகள் விலகப் போவதோ போன்ற செய்திகள் முற்றிலும் பொய்யானவை. கட்சியின் கட்டமைப்பு வலுவாக உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.மேலும், வரும் மே 16 ஆம் தேதி சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் விசிக மாநில வணிகர் அணியின் ‘வணிகர் எழுச்சி மாநாடு’ நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் மயிலாடுதுறை, சிதம்பரம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடத்திட தொண்டர்கள் மற்றும் வணிகர்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அக்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
