விஜயின் சவாலை பற்றி எல்லாம் நாங்கள் கவலை அடையவில்லை – அமைச்சர் ரகுபதி

தேர்தலைக்கண்டு நாங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் தேர்தல் களத்துக்கு தயாராகி விட்டோம். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கும்போது நாங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது

பழுத்த மரத்தில்தான் கல்லடிப்படும். ஒவ்வொருத்தரும் திமுகவை விமர்சித்தால் தான் அரசியலில் தங்களை நிலைநிறுத்தி கொள்ள முடியும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் ஒன்றிய அரசு மூன்றாவது மொழியை கற்க வேண்டும் என்று திணிக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை மூன்றாவது மொழியை திணிக்க கூடாது இரு மொழி தமிழ்நாட்டிற்கு போதும் என்பதுதான் மூன்றாவது மொழி தேவை இல்லை…. புதுக்கோட்டையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டையில் உள்ள கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூபாய் 20 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன் நவீன மயமாக்கப்பட்ட ஆண் பெண் இருபாலருக்கும்மான தனித்தனி உடற்பயிற்சி கூடத்தினை இன்று மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பையில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அமைச்சர்கள் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.

இதன் பின்னர் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்: ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியில் இருந்திருக்கலாம். ஆனால் இன்று இந்தியா முழுவதும் என்னை அடையாளம் காட்டியிருப்பது திமுக. கலைஞர் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின். உறுதுணையாக இருக்கக்கூடியவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

யாரால் அடையாளம் காட்டப்படும் வளர்க்கப்பட்டும் என்பதை விட இன்று இந்தியா முழுவதும் என்னை தெரியப்படுத்தும் வகையில் உள்துறை இணை அமைச்சர், வனத்துறை இணை அமைச்சர் பொறுப்பு போன்றவை எல்லாம் பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் மருந்து முன்னாள் முதலமைச்சர் கலைஞரும் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான். 2000 முதல் தற்போது வரை 25 ஆண்டு காலம் வரலாறு என்பது திமுகவில் தான் தனக்கு இருக்கிறது.

எம்ஜிஆர் காலத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராகவில்லை நான் முதல் முதலில் 1991ல் தான் சட்டமன்ற உறுப்பினர் ஆனேன்.

தவெக தலைவர் விஜயின் சவாலை பற்றி எல்லாம் நாங்கள் கவலை அடையவில்லை. விஜயை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் அவரது கேள்வியை தவிருங்கள். விஜயின் விமர்சனத்திற்கு உரிய பதிலை எங்களது கட்சி கூறிவிட்டது. யாரும் யாரையும் மிரட்ட முடியாது நாங்கள் யாரையும் மிரட்டவும் மாட்டோம். எங்களைப் பொறுத்தவரை அரசியல் கட்சியை பற்றி கேள்வி கேளுங்கள்.

நாங்கள் எந்த கட்சியையும் அபகரிக்கவில்லை அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கும் சுதந்திரமாக பேசுவதற்கும் சட்டமன்றத்தில் முன்வரிசையில் இடமும் தந்து அவர்கள் குண்டான கருத்துக்களை சுதந்திரமாக சொல்வதற்கு உண்டான வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் யாரையும் அபகரிக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு அந்த நிலை இல்லை.

அதிமுக பாஜகவுக்கு வேண்டுமென்றால் அந்த நிலை இருக்கும். எந்த கட்சியை கபலிக்கரம் செய்ய வேண்டும் என்றெல்லாம் அவர்கள் நினைக்கலாம். எங்களைப் பொறுத்தவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களை ஓரணியில் தமிழ்நாடுல் இணைத்துள்ளோம். 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளோம். அனைத்து தொகுதிகளிலும் 40 சதவீத வாக்குகளை கொண்டுள்ள ஒரு கட்சி இந்தியாவில் இருக்கின்றது என்றால் அது திமுக தான். திமுக கூட்டணி உடையும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு.

தேர்தலைக்கண்டு நாங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் தேர்தல் களத்துக்கு தயாராகி விட்டோம். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கும்போது நாங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது. பழுத்த மரத்தில்தான் கல்லடிப்படும். ஒவ்வொருத்தரும் திமுகவை விமர்சித்தால் தான் அரசியலில் தங்களை நிலைநிறுத்தி கொள்ள முடியும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். திமுக கூட்டணி பலவீனம் ஆவதற்கான வாய்ப்பே கிடையாது.

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை நாங்கள் தாக்கல் செய்கின்றோம். எந்தெந்த முதலீட்டுகளை ஈர்த்து வந்துள்ளோம் என்பதை எல்லாம் ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்த பிறகும் அங்கேயே செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெளிவுபடுத்தி வந்திருக்கிறார். அதை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்யவில்லை.

ஒரு கட்சியில் இருப்பவர்கள் இன்னொரு கட்சிக்குப் போகலாம் அது அவரவர்கள் விருப்பம். இதை விழுங்க பார்ப்பது என்று சொல்ல முடியாது. நாங்கள் தோழமைக் கட்சிகளை அரவணைத்து தான் செல்வமே தவிர அவர்களை விழுங்க மாட்டோம்.

தற்போது ஒன்றிய அரசு ஜிஎஸ்டியை குறைத்துள்ளதை 8 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கலாமே. முன்பே இந்த பலனை பொதுமக்களுக்கு தந்திருந்தால் அவர்கள் பலனடைந்து இருப்பார்கள். அவர்களை கஷ்டப்படுத்தி பணத்தை எல்லாம் வாங்கிக்கொண்டு தற்போது நாங்கள் நன்மை தந்து இருக்கின்றோம் என்று சொன்னால் 8 ஆண்டு காலம் மக்களிடம் வாங்கிய பணத்தை எல்லாம் ஒன்றிய அரசு இதற்கு மேல் சொல்லவில்லை அவர்களை தெரிந்து கொள்ளட்டும்.

தமிழ்நாடு மாணவர்கள் இரு மொழி கொள்கையைத்தான் விரும்புகிறார்கள். இரு மொழிக் கொள்கைகள் படித்தவர்கள் தான் அகில உலக அளவில் பிரபலமான இந்தியர்களாக இருக்கிறார்கள். முன்மொழி கொள்கையை படித்துவிட்டு யாரும் இல்லை.

இருமொழிக் கொள்கை போதும். நாம் படிப்பது என்ன என்று புரிந்து கொள்வதற்கு தாய்மொழியான தமிழ். அதை வெளிப்படுத்துவதற்கு ஆங்கில மொழி. இந்த இரண்டும் இருந்தால் போதும் அதற்கு மேல் மொழிகளை கற்றுக் கொள்வது அவரவர்கள் சாமர்த்தியம். அதை நாங்கள் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசின் கொள்கை இரு மொழி கொள்கைதான். இருமொழிக் கொள்கையில் படித்தவர்கள் தான் சிறந்தவர்களாக வந்திருக்கிறார்கள். பெரிய தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் எல்லாம் வரவில்லை. அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தான் வந்திருக்கிறார்கள்.

ஒன்றிய அரசு மூன்றாவது மொழியை திணிக்கிறார்கள். மூன்றாவது மொழியை கற்க வேண்டும் என்று. எங்களைப் பொறுத்தவரை மூன்றாவது மொழியை திணிக்க கூடாது இரு மொழி தமிழ்நாட்டிற்கு போதும் என்பதுதான் மூன்றாவது மொழி தேவை இல்லை என்பதுதான் என்று தெரிவித்தார்.

Exit mobile version