திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தனியார் கல்லூரி வாசல் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தைச் (AUT) சார்ந்த பேராசிரியர்கள் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மூன்றாவது நாளாக கருப்பு சட்டை அணிந்து கையில் தமிழக அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் பதாகைகளோடு கோஷங்கள் எழுப்பி முழக்கப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அப்போது பேராசிரியர்கள் கூறுகையில் தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதா பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் அலுவலர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் அதை வலியுறுத்தும் விதமாக பல்வேறு முழக்கங்களை எழுப்பி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
மேலும் எங்களது கோரிக்கையை ஏற்க அரசு தாமதப்படுத்தினால் மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது மட்டுமின்றி அனைத்து குடும்பங்களையும் ஒன்றிணைத்து சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

















