சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி 100% வாக்கு பதிவு செய்யக்கோரி நடைபெற்றது
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது .இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பொதுமக்களிடையே 100% வாக்குப்பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் .
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் நர்சிங் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பாதைகளுடன் பேரணியாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
இந்த பேரணியை சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் வட்டாட்சியர் துணை காவல் கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 100% வாக்கு பதிவு செய்ய கோரி விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
