மேகதாது விஷயத்தில் கர்நாடக அரசு ஒரு கல்லை கூட எடுத்து வைக்க அனுமதிக்க மாட்டோம் என விசுவநாதன் பேட்டி

மேகதாது விஷயத்தில் கர்நாடக அரசு ஒரு கல்லை கூட எடுத்து வைக்க அனுமதிக்க மாட்டோம் என திருவாரூரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரமான விசுவநாதன் பேட்டி..

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி கூறும்போது….

திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டத்திற்கு அதிகாரிகள் வரும்போது முறையான மற்றும் சரியான தகவலுடன் வர வேண்டும் என அறிவுரை கூறினார்.

மேலும் பல்வேறு துறை அதிகாரிகளிடம், பல்வேறு துறை சம்பந்தமாக கேள்வி கேட்ட போது… அவை அனைத்திற்கும் துறை அதிகாரிகளை விட, மாவட்ட ஆட்சியரே முன் நின்று பதில் கூறினார். இதனைக் கண்ட நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ்.., எல்லாவற்றுக்கும் ஆட்சியர்தான் பதிலளிக்க வேண்டுமா..? என்று ஆட்சியரை கலாய்த்தார்.

இதனை தொடர்ந்து நீடாமங்கலம் பகுதியில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு கடந்த ஆட்சியில் பணம் வழங்கப்பட்டும், இன்னும் பேருந்து நிலையம் கட்டவில்லை என்றும், கடந்த பல ஆண்டுகளாக திமுக தான் ஆட்சியில் இருந்தாலும், 50 ஆண்டுகளாக நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் இல்லை என திருவாரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறும்போது..

தமிழ்நாட்டிற்கு நீட் விலக்க வேண்டும் என்பதில் தமிழக முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார். நீட்டில் நடைபெறும் குளறுபடிகள் மத்திய அரசை சார்ந்தது. நீட் தேர்வு வினாத்தாள் எவ்வாறு வெளியானது..? நீட் தேர்வை நடத்துங்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தான் நடக்கிறது, நானும் காங்கிரஸ் அமைச்சர் தான் உட்கார்ந்து இருக்கிறேன். மேகதாது விஷயத்தில் கர்நாடகா அரசு ஒரு கல்லை கூட எடுத்து வைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார். மேலும் உயர்கல்வித்துறை லஞ்சம் ஊழல் இல்லாமல் செயல்படும் என உறுதி அளித்தார்.

பேட்டி : விஸ்வநாதன் – தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர்

Exit mobile version