விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கெடார் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “கலைஞர் நூலகம்” புதியதாக திறந்து வைக்கப்பட்டது
நூலக திறப்பு நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன்.கௌதமசிகமணி குத்துவிளக்கேற்றி நூலகத்தை திறந்து வைத்து மாண்புமிகு கலைஞர் அவர்கள் சமூக நீதியும் கல்வியையும் முன்னிறுத்தியவராக இருந்தார். இளைஞர்கள் கல்வி, அறிவு வளர்ச்சியில் முன்னேறுவதற்காக இந்நூலகம் முக்கிய பங்கு வகிக்கும்” என தெரிவித்தார்.
இந்த “கலைஞர் நூலகத்தில்” போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி நூல்கள், பொது அறிவு மற்றும் வரலாற்று புத்தகங்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளன. இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா, மும்மூர்த்தி , முருகன், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெயச்சந்திரன் திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பினர், ஊராட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
