விழுப்புரம் கிழக்கு நகர திமுக துணை முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
விழுப்புரம் கிழக்கு நகரம் சார்பில் தமிழக துணை முதல்வர் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை தமிழக முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வெகு விமசியாக கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் கிழக்கு நகர செயலாளர் வெற்றிவேல் தலைமையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் நகர மன்ற தலைவர் மற்றும் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானம் வழங்கினார் விழாவில் விழுப்புரம் நகரம் முழுவதிலும் இருந்து பல்வேறு பிரிவு நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்காக அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் அதில் பங்கேற்று பயனடைந்தனர். மாநில துணை முதல்வரின் பிறந்தநாளை மக்கள் நலத்திட்டங்களுடன் இணைத்து கொண்டாடிய இந்த நிகழ்ச்சி, சமூக சேவைக்கான தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்ற கழகத்தினர் கலந்து கொண்டனர்.

















