விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தில் ஜிப்மர் சமூகத் தொடர்பு மையம் மற்றும் ஆனாங்கூர் கிராம பஞ்சாயத்து இணைந்து பொதுமக்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமை ஆணாகூர் ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி வெங்கடேசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் முகாமில் பொது மருத்துவம் எலும்பு தோல் சர்க்கரை குழந்தைகள் நலம் பெண்கள் நலம் சார்ந்த பிரச்சினைகள் பரிசோதனை செய்து டாக்டர்கள் குழுவினர் உரிய ஆலோசனைகள் வழங்கினர் இது பங்கேற்ற மக்களை எலும்பு மருத்துவ உதவி பேராசிரியர் டாக்டர் ஜிப்சன் சாமுவேல் தலைமையிலான மருத்துவ குழுவினர் செய்தனர் இதில் ஆனாங்கூர் பானாம்பட்டு பில்லூர் சேந்தனூர், சாமி பேட்டை ஐந்து கிராமங்கள் பொதுமக்கள் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் இதில் ஏற்பாட்டாளர் வெங்கடேசன் மற்றும் கனிமொழி வெங்கடேசன் உடன் இருந்தனர்

















