தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு & தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கம் சார்பில் விழுப்புரம் வேட்பாளர் அறிமுக கூட்டம்

விழுப்புரம் தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கம் சார்பில் விழுப்புரம் சட்டசபை தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநில அமைப்பு செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ஆனந்தன் துரை, மாவட்ட தலைவர் நாராயணன், செயலாளர் தேவராஜன், துணை தலைவர் சங்கர், துணை செயலாளர் வடிவேல் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாநில ஒருங்கிணைப்பாளர் முத்து ரட்சகன், விழுப்புரம் சட்டசபை தொகுதி வேட்பாளர் ராமன் என்பவரை அறிமுகம் செய்து வைத்து கூறியதாவது,

தமிழகத்தில் விஸ்வகர்மா சமூகம் பெரும்பான்மையாக உள்ளது. எங்கள் சமூகத்தை சேர்ந்தோர் நகை, தச்சு தொழில்களில் உள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆனால், எங்கள் சமூகத்திடம் ஓட்டுகளை பெற்று கொண்டு, எங்களை முன்னேற்றம் அடைய செய்வதற்கு எந்த முயற்சிகளும் செய்யவில்லை. ஆதலால், எங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவரை சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும் அனுப்புவது என முடிவு செய்துள்ளோம். அப்போது தான் எங்கள் சமூகமும் முன்னேற்ற நிலையை காணும். தமிழகத்தில் எங்கள் சமூகத்தினர் அதிகமாகவுள்ள 50 தொகுதிகளை தேர்வு செய்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறோம். திருச்சி, முசிறி, மணப்பாறை, விழுப்புரம், திருக்கோவிலுார் உள்பட பல தொகுதிகள் உள்ளது. தேர்தல் கால அவகாசம் குறைவாக உள்ளதால் விரைவில் மக்களை சந்திக்கவுள்ளோம். ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் எங்கள் சமூக முன்னேற்றத்திற்கு ஏதும் செய்யாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். பேட்டி உள்ளது

Exit mobile version