தமிழக அரசை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது :-
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராம்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நவீனமயமாக்கம் செய்யப்பட்ட அலுவலகம் அமைத்து தரவேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடி நியமன முறையில் கல்வித் தகுதியை பட்டப் படிப்பு என மாற்றியமைக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்வுநிலை சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்கள் என பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

















