கிராம நிர்வாக உதவியாளர்கள் வீஏஓ பதவி உயர்வு பெற 10 ஆண்டுகளுக்கு பதில் 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் முத்துவேல் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக அலுவலக உதவியாளருக்கு இணையான கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 15,700 வழங்க வேண்டும் , கிராம நிர்வாக உதவியாளர்கள் வீஏஓ பதவி உயர்வு பெற 10 ஆண்டுகளுக்கு பதில் 6 ஆண்டுகளாக குறைக்க விதி திருத்த வேண்டும்உள்ளிட்ட 5அம்ச கோரிக்கை வலியுறுத்தி திருவாரூர் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
சாலை மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது


















