கடலூர் :
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்டோபர் 11ஆம் தேதி கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அனுமதி கோரிக்கையை காவல்துறை அதிகாரிகளிடம் கட்சித் தரப்பில் சமர்ப்பித்திருந்த நிலையில், தலைமை தபால் நிலையம் அருகே கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.
ஆனால், கரூரில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட பெரும் விபத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், விஜயின் அடுத்தடுத்த பிரச்சாரங்கள் குறித்து சந்தேகம் எழுந்தது.
இந்த சூழலில், வரும் 11ஆம் தேதிக்கான கடலூர் பிரச்சார கூட்டத்திற்கு எந்தவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ள வேண்டாம் எனக் கட்சி தலைமையிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியிலிருந்து தனிப்பட்ட அறிவிப்பு வரும் வரை எந்தவொரு நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது என கடலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.