தேனாம்பேட்டையில் தேனி புயல் : விஜய் திறக்க உள்ள மிகப்பெரிய ஐ.டி. விங் அலுவலகம் !

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், தன்னுடைய கட்சி செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக, சென்னை தேனாம்பேட்டையில் சிறப்பு ஐ.டி. விங் அலுவலகத்தை விரைவில் திறக்க உள்ளார். இந்த அலுவலகம், கட்சியின் தரமான டிஜிட்டல் பாணியில் நடைபெறும் தேர்தல் பணிகளுக்காகவும், நடைபயணத்துக்கான கள வேலைகளுக்காகவும் அமைக்கப்படுகிறது.

விஜயின் அரசியல் பயணம், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பாணியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 2009ம் ஆண்டு தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகு, ஜெகன் மேற்கொண்ட பாதயாத்திரை அவரது அரசியல் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அந்த யாத்திரையின் மூலமாக மக்களிடையே நெருக்கம் ஏற்பட்டு, அவர் முதல்வர் பதவியையும் அடைந்தார்.

அந்தவகையில், தற்போது விஜய்க்கும், பிரஷாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தில் திட்ட ஆலோசகராக இருந்த ஜான் ஆரோக்கியசாமி முக்கிய பங்காற்றி வருகிறார். அவர் ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் ஆலோசனைகள் வழங்கிய அனுபவம் பெற்றவர். தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மற்றும் பிரச்சார பணிகளுக்கு அவர் வழிகாட்டியாக செயல்படுகிறார்.

நடைபயணம் செப்டம்பரில் துவக்கம்

விஜய், எதிர்வரும் செப்டம்பர் மாதம் தனது மாநிலமெங்கும் நடைபயணத்தைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடைபயணம், பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி, தஞ்சாவூரில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. டெல்டா பகுதிகளில் தவெகவிற்கு ஏற்படும் ஆதரவை கருத்தில் கொண்டு, அப்பகுதியிலிருந்து ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் செயற்குழு கூட்டமும், மாநில அளவிலான மாநாடும் நடைபெற உள்ளன. இதில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இது, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஓர் அடையாள முயற்சியாகவும் கருதப்படுகிறது.

அலுவலகம்… ஆக்ஸனுக்கு ரெடி!

சென்னை தேனாம்பேட்டையில் அமைக்கப்படும் புதிய ஐ.டி. விங் அலுவலகத்தில், தேர்தல் தரவுகள் சேகரிப்பு, சோஷியல் மீடியா மேலாண்மை, மற்றும் வாக்காளர் விவரங்களை தொகுக்கும் டிஜிட்டல் குழுவும் செயல்படவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அலங்கார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விஜயின் வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் தோற்றம், அவரது பேச்சுகள் அனைத்தும் தற்போது அவரது அரசியல் பயணத்தை புதுப்படியும், திட்டமிட்ட விதத்திலும் அமைத்துவரும் ஆழமான ரணதிட்டத்தை சுட்டிக்காட்டுகிறது.

Exit mobile version