விஜய் தமிழகத்தை பத்தி ஆழ்ந்த யோசித்து பதில் அளிக்க வேண்டும் – ஹெச். ராஜா

தமிழக வெற்றி கழக மாநாடு நடந்த இடத்தை தொண்டர்கள் அலங்கோலப்படுத்தின காட்சி, ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு எவ்வளவு அலங்கோலமாக இருக்கும் என்பது அந்த மாநாடு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என பாஜக தலைவர் ஹெச். ராஜா நெல்லையில் குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் நடந்த பாஜக தென் மண்டல பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பாஜக மூத்த நிர்வாகி ஹெச் ராஜா பின்பு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடந்த தேநீர் விருந்து கலந்து கொண்டார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

விஜயின் பேச்சு அரசியல் முதிற்சி இல்லாத பேச்சாகவும் இன்னும் ஆழ்ந்து நிறைய படிக்க வேண்டும். விஷயங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்தில் கொடுத்த நிதியை எண்ணி பார்க்க வேண்டும். பாஜகவுக்கு என்று தனி பாரம்பரியம் உள்ளது. ஆனால் விஜய் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி வருகிறார். பாஜக தலைமையிலான மோடி அரசு தமிழகத்திற்கு செய்திருக்கிற சாதனைகள் எண்ணற்றது.

விஜய் தமிழகத்தை பத்தி ஆழ்ந்த யோசித்து பதில் அளிக்க வேண்டும் விஜய் கூட்டத்தை பார்த்தவுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசியுள்ளார். மீனவர் பிரச்சினை எடுத்துக் கொண்டால் கட்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தான் காரணம். அதனால் இந்திய கடல் அளவு குறைந்துவிட்டது. காங்கிரசும் திமுகவுக்கும் தமிழர்களுக்கு செய்த துரோகம் கட்சதீவை விட்டுக் கொடுத்தது தான்.

ஆனால் கடந்த 11 ஆண்டுகள்ல ஒரே ஒரு மீனவர் ராமேஸ்வரத்தில் கொல்லப்பட்டார். அதுவும் மீன் பிடி காரணங்களுக்காக இல்லை. அன்றைக்கு நடந்த கிரிக்கெட் போட்டியில் இலங்கையை இந்தியா ஜெயித்து விடுகிறது. அதனால இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களை தாக்கி ஒருவர் இறந்தார். அது தவறு. இந்த 11 வருஷத்துல ஒரு இறப்பு கூட கிடையாது. ஆனால் 600க்கும் மேற்பட்ட மீனவ படுகொலைகள் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தது.

முருக பக்தர் மாநாட்டில் அங்கு எல்லா சேர்களும் அடுக்கி வைக்கப்பட்டு ஒரு குப்பை கூட இல்லாமல் ஒழுக்கமானவர்கள் தேசபக்தர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு ஹிந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்த அந்த மாநாடு ஒன்னு. இன்னொன்னு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட நாற்காலிகள் நொறுக்கப்பட்டன. பாட்டில் எல்லாம் கீழே சிதறி கிடந்தது. எல்லாம் நம்ம பார்க்கிறோம். இப்படி ஒரு மாநாடு நடந்தாலே அந்த இடத்தை அலங்கோல படுத்தின ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு எவ்வளவு அலங்கோலமாகும் என்பதை மாநாடு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கு. ஆகவே மக்கள் புரிந்து கொள்வார்கள். எனவே அந்தக் கட்சி எல்லாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு நொறுங்கிப் போகும். சாமி தயவு செய்து வேண்டாம். இது தமிழர்கள் தான் முடிவு பண்ண வேண்டும் என்று தெரிவித்தார்.

Exit mobile version