திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்துவோம் என வாக்கு சேகரிப்பின் போது கூறினோம் எனவும், காந்தி பெயரை எடுத்து ராம் பெயரை மாற்றியும், 100 நாள் வேலையை 125 நாட்களாக மாற்றினோம் என்பது பொய் எனவும், 100 நாட்கள் வேலையில் 50 நாட்கள் தான் வேலை வழங்கினர். நிதியமைச்சர் கூறியது போல் அந்த வேலையில் இருந்து வரவில்லை என கூறியதால் என்னவோ, 100 நாட்கள் வேலை தரவில்லை எனவும், சோனியா உள்ளிட்டோர் விவசாய கூலிகளின் நிலைமையை மாற்றிவே கொண்டு வந்தனர்.100 நாள் வேலை என்பது சட்டம் எனவும், வேலை ஆட்கள் இல்லை என்பது உண்மை எனவும், ஐஏஎஸ் சேரும் போது சம்பளம் உயர்ந்தது.ஆனால் 100 நாள் வேலைக்கு ஏன் சம்பளம் ஏற்றவில்லை எனவும், மத்திய அரசு எங்கெங்கு வேலை நடக்கும் என நினைக்கிறன்றனரோ, அங்கு தான் வேலை எனவும், உரிமையை அழித்து விட்டனர். 100 நாள் வேலையின் உயிரை பிடுங்கி விட்டனர் எனவும், வயிற்றில் கூட அடிக்கலாம்,ஆனால் உரிமையை அடிக்க கூடாது எனவும், 90% மத்திய அரசும், 10% மாநில அரசும் கொடுத்த நிலையில், இப்போது 60% மத்திய அரசும், 40% மாநில அரசும் வழங்க வேண்டும் என மாற்றியுள்ளனர். 100 நாள் வேலையை சிம்பிளிபை செய்த நிலையில் காம்பிளிகேட்டாக மாற்றி விட்டனர் எனவும், 100 நாள் வேலை 125 நாள் என பொய் கூறுவதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது எனவும், 5-ஆம் முதல் இந்தியா முழுவதும் பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 5-ஆம் தேதி முதல் திருவள்ளூர் தொகுதியில் 100 நாள் தொழிலாளர்களுடன் நேரடியாக சென்று புரிய வைக்க உள்ளோம் எனவும், ஜனவரி மத்தியில் திருவள்ளூரில் பெரிய போராட்டம் நடத்தப்படும்.நடை பயணம் மேற்கொள்ளப்படும் எனவும், அதிமுகவை நேரடியாக கேட்கிறேன்.100 நாள் வேலையை 125 நாட்களாக மாற்றி விட்டோம் என ஏன் பொய் சொல்கிறீர்கள் எனவும் இந்த சட்டத்தை எப்படி நிறைவேற்றினார்கள்? ஜி ராம்ஜி என ஒரு சட்டம் அமைத்து அவசர அவசரமாக சட்டம் இயற்றினார்கள் எனவும், ஊரக வளர்ச்சி அமைச்சருக்கு கூட இது தெரியாது எனவும்,6 மணி நேரம் ஆலோசிக்கப்பட்டது எனவும்,15 நிமிடத்திற்குள் சட்டம் அமல்படுத்தப்பட்டது எனவும்,தாம் உட்பட 8 எம்பிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும்,உரிமைகளை வயிற்றில் அடித்தது எனவும், தமிழகம், தமிழக இளைஞர்கள் இதை பார்த்துக்கொண்டிருக்க கூடாது எனவும், பாஜவுக்கு துணை நிற்பவர்களையும் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. உயர்கல்வி அவர்களுக்கு யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும், அணுமின் நிலையங்கள் தனியாருக்கு ஒப்படைக்க உள்ளனர் எனவும், எண்ணெய் குழாய்கள் அமைக்க உள்ளனர் எனவும், தமிழகத்தை குறிவைத்து தாக்கும் விஷயங்களை பார்க்க முடிகிறது எனவும், திருவள்ளூரில் ரயில் நிறுத்தங்கள் நடக்கும் என கூறியுள்ளனர் எனவும் திமுக அரசு மக்களின் பிரச்சினைகளை செய்கின்றனர்.மக்கள் பிரச்சினைகளை முதல்வர் சிறப்பாக செய்கிறார் எனவும், காங்கிரசுடன் திமுக எம்பிகளும் போராடி வருகின்றனர் எனவும், விவசாய சட்டங்களோடு 70 வருடங்களாக 90 சட்டங்கள் உருவாக்கினோம், அவற்றில் 4 சட்டங்களை மட்டுமே அனுமதிக்க உள்ளனர் எனவும், வரும் ஆண்டும் உழைக்கும் வர்க்கங்களின் கிளர்ச்சியாக அமையும் எனவும், தேர்தல் ஆணையருக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பயமாக இருக்கிறதோ என்னவோ, அவர்களே பாதுகாப்பு வாங்கி கொள்கின்றனர் எனவும், வருவாய் ஈட்டுவது அரசாங்கத்தின் வேலை அல்ல, எனவும், பிகாரில் கடனே வாங்கவில்லை, அரசு செயல்படவில்லை என்று தான் அர்த்தம் எனவும் செவிலியர், ஆசிரியர் பிரச்சினைகள் குறித்து உழைக்கும் வர்க்கத்தோடு நிற்பவன் நான் எனவும், கரூர் பிரச்சினைகளுக்கு பின் விஜய் பாஜக பற்றி பேசுவதில்லை எனவும், விஜய் டயலாக் ரேட்டிங்கில் பேசுகிறார்,கன்டன்ட் இல்லை எனவும், 2026-இல் காங்கிரஸ் மக்களோடு போகும் எனவும் தெரிவித்தார்.
100 நாள் வேலையை கொன்ற பெருமை பாஜகவை சேரும் என விஜய் டயலாக் ரேட்டிங்கில் பேசுகிறார்
-
By Satheesa

- Categories: News
- Tags: 100 days of workbjpdistrict newstamilnadu
Related Content
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி
By
Satheesa
February 4, 2026
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்
By
Satheesa
February 4, 2026
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது
By
Satheesa
February 4, 2026
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு
By
Satheesa
February 4, 2026