ஜெயலலிதா பாணியில் “செய்தீர்களா” என கர்ஜித்த விஜய் !

திருச்சி :
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது முதல் பிரசாரத்தை திருச்சியில் இன்று தொடங்கினார். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் திருச்சி நகரம் முழுவதும் பரபரப்பானது. இதனால், காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய பிரசாரம் மதியம் 2.30 மணிக்குப் பிறகே தொடங்கப்பட்டது.

மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, திமுக அரசு வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டிய விஜய், “செய்தீர்களா?” எனக் கேள்வி எழுப்பியதோடு, மறைந்த ஜெயலலிதாவின் பிரசார பாணியை நினைவூட்டும் வகையில் உரையாற்றினார்.

திமுக வாக்குறுதிகள் – நிறைவேற்றினீர்களா ?

விஜய் உரையாற்றியபோது,

அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு அளிப்பதாகக் கூறி நிறைவேற்றவில்லை,

மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்து செயல்படுத்தவில்லை,

ரூ.1000 மகளிர் உதவித்தொகையை வழங்கி பெண்களை அவமதிப்பது தவறு,

இலவச பேருந்து பயணம் செய்த பெண்களை இழிவாகப் பேசுவது ஏற்க முடியாது,

டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பது குறித்து எதுவும் செய்யவில்லை,

நீட் தேர்வு ரத்து, ஏழைகளுக்கு வீடு, 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்ற வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் கலந்துவிட்டன, எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர், “ஸ்ரீரங்கத்தில் மல்லிகை பூ அதிகம் விளைந்தாலும் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படவில்லை. இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சிக்கு முன்னேற்றமில்லை. காவிரி நீர் பாயும் இடத்தில் கூட குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. அதைக் கையாளாமல் மணல் கொள்ளையிலேயே அரசு கவனம் செலுத்துகிறது. கிட்னி திருட்டை முறைகேடு எனச் சொல்லும் நிலைமையை மக்கள் தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்,”
என்று குற்றம் சாட்டினார்.

“என் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும்” “நான் வழங்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கல்வி, மருத்துவம், மின்சாரம் போன்ற அடிப்படை சேவைகளில் எந்தவித சமரசமும் இருக்காது. மக்களின் சத்தம் கேட்க வேண்டும், முதலமைச்சரே!” என்று சத்தியம் செய்து உரையை நிறைவு செய்தார்.

Exit mobile version