தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தனது அரசியல் பயணத்தை திருச்சியில் தொடங்கியிருந்தார். அங்கு மக்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் அடுத்த கட்டமாக நாகை மாவட்டத்தில் செப்டம்பர் 20-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
நாகையில் ஏழு இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், மாவட்ட காவல்துறை தற்போது புத்தூர் ரவுண்டானா பகுதியில் மட்டுமே உரையாற்ற அனுமதி வழங்கியுள்ளது. காரைக்கால் வழியாக மாவட்ட எல்லையை கடந்த விஜய், வாஞ்சூர் ரவுண்டானாவில் தொண்டர்களின் வரவேற்பை ஏற்று, நாகூர் வழியாக புத்தூர் ரவுண்டானாவை சென்றடைந்து அங்கிருந்து தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். பின்னர் சிக்கல், கீழ்வேளூர் பைபாஸ் வழியாக திருவாரூர் மாவட்டம் மற்றும் மயிலாடுதுறை நோக்கி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சியில் ஏற்பட்ட மிகுந்த மக்கள் கூடுகையை கருத்தில் கொண்டு, நாகையில் போலீசார் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதன்படி :
விஜயின் வாகனத்தை தொண்டர்கள் பின்தொடரக் கூடாது.
ரோடு ஷோவில் வாகனத்தின் மேலே நிற்க தடை.
உரையாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ள புத்தூர் ரவுண்டானா பகுதியிலேயே மட்டுமே பேச்சு நிகழ்த்த வேண்டும்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது.
பொது மற்றும் அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது.
என்கிற வகையில் பல கண்டிஷன்களை போலீசார் அறிவித்துள்ளனர்.