சென்னையில் முருங்கைக்காய் விலை 50% குறைவு

சென்னை: கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் முருங்கைக்காயின் விலை கிலோ ரூ.60-இல் இருந்து ரூ.30 ஆகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக நுகர்வோர்களிடையே மகிழ்ச்சி நிலவுகிறது.

தமிழ்நாடு, குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம், முருங்கைக்காய் உற்பத்தியில் தேசிய அளவில் முன்னணியில் உள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகமாக இருந்ததால், முருங்கைக்காய் விளைச்சல் குறைந்து, விலை உயர்ந்திருந்தது.

ஆனால் சமீப காலங்களில் சில பகுதிகளில் மழை பெய்ததையடுத்து, விளைச்சல் அதிகரித்து வரத்து சீரடைந்ததால், விலை சுமார் 50% குறைந்துள்ளது என்று கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது:

மற்ற காய்கறி விலை நிலவரம் (மொத்த விலை):

விலை குறைவால் பொதுமக்களுக்கு பயனாக இருந்தாலும், விவசாயிகள் நஷ்டமின்றி விற்பனை செய்யும் வழிமுறைகளும் அரசு மற்றும் சந்தை நிர்வாகம் மூலம் ஆராயப்பட வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்துகிறார்கள்.

Exit mobile version