திருப்பதின்னு சொன்னாலே நம்ம எல்லருக்குமே லட்டு தான் நியாபகதுக்கு வரும்.. ஆனா, திருப்பதி கோயில்ல மூணு விதமான லட்டுகள் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? இந்த வீடியோவுல இந்த மூணு லட்டுகளோட ரகசியத்தை, சுவையை, பாரம்பரியத்தை பார்க்கப் போறோம்.
முதல்ல ஆஸ்தான லட்டு, முதன்மையான விழா நாட்களில் மட்டும் தயாரிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படுது. இது 750 கிராம் எடையுடனும், இதுல நெய்யும், முந்திரியும், ஏலக்காயும் கொஞ்சம் அதிகமா சேர்க்கப்படுது, அதனால இன்னும் ரிச்சா இருக்கும். “இந்த லட்டு வருஷத்துக்கு ஒரு சில நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும், அதனால இதை வாங்குறவங்க ரொம்ப ஸ்பெஷல்-னு நினைக்கப்பாங்க!”
இரண்டாவது, கல்யாண உற்சவ லட்டு கல்யாண உற்சவ சேவையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுது. இது 750 கிராம் எடையுடன் இருக்கும். குங்குமப்பூ, பாதாம் போன்ற பிரீமியம் பொருட்கள் சேர்க்கப்படுது, அதனால இதோட டேஸ்ட் மற்ற லட்டுகளை விட தனி சிறப்பு இருக்கு.. இந்த லட்டு பக்தர்களுக்கு மிகவும் அரிதா கிடைக்கும், அதனால இதை வாங்குறது ஒரு பாக்கியமா கருதப்படுது.
மூன்றாவது, புரோகிதம் லட்டு இது திருப்பதி கோயிலோட பிரதான பிரசாதம். எல்லா பக்தர்களும் தரிசனம் முடிச்சு இதைத்தான் வாங்குறாங்க , இதுல பயன்படுத்தப்படுற பொருட்கள் – உயர்ந்த தரமான கோதுமை மாவு, சுத்தமான நெய், சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை. இதோட சுவை? ஒரு கடி எடுத்தா, பக்தியும் இனிப்பும் ஒரு சேர உருகுது! இந்த லட்டு கோயிலோட புனிதத்தை பக்தர்களுக்கு எடுத்துட்டு போகுது. இந்த லட்டு ஒரு நாளைக்கு 3 லட்சம் வரைக்கும் தயாரிக்கப்படுது, ஆனாலும் எப்பவும் டிமாண்ட் அதிகமா இருக்கு