கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா வாக்கூர் கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த இளங்கோவன் மகன் இ.தேர்விஜயன் (50) என்பவருக்கும் அவரது அண்ணன் அருள்பிரகாசம் என்பவருக்கும், அவரது மற்றொரு அண்ணன் வேல்முருகன் என்பவரால் தானமாக வழங்கப்பட்ட தரசூர் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு விண்ணப்பம் செய்திருந்தார். இந்த பட்டா மாற்றத்தை செய்வதற்கு சிதம்பரம் வட்டம், வாக்கூர் கிராம நிர்வாக அலுவலர் ஜி.சதீஷ்குமார் என்பவர் கடந்த 14.08.2025 ஆம் தேதி இ.தேர்விஜயன் என்பவரிடம் ரூ.6,000/- லஞ்சமாக கேட்டுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் கேட்ட பணத்தை கொடுத்துவிடுமாறு வாக்கூர் கிராம உதவியாளர் ரமேஷ் என்பவரும் தேர்விஜயனிடம் அறிவுறுத்தியும் உள்ளார்.
புகார்தார்ருக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் 19.08.2025 இன்று கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் மேற்படி வாக்கூர் கிராம நிர்வாக அலுவலர் ஜி.சதீஷ்குமார் மற்றும் வாக்கூர் கிராம உதவியாளர் ரமேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி புகார் மனு கொடுத்தார். அவரது புகார் மனு மீது கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் இன்று 19.08.2025ம் தேதி புகார்தாரர் இ.தேர்விஜயன் என்பவரிடம் ரூ.6,000/- லஞ்சப்பணத்தை கிராம நிர்வாக அலுவலர் ஜி.சதீஷ்குமார் கேட்டு வாக்கூர் கிராம உதவியாளர் ரமேஷ் மூலமாக வாங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த காவல் துணை கண்காணிப்பாளர் கே.சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணம் வாங்கிய வாக்கூர் கிராம நிர்வாக அலுவலர் ஜி.ச