சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில் இக்கோயிலில் மூலவராக வைகுண்டவாசரும், உற்சவராக பக்தவச்சலரும், தாயாராக கனகவல்லி அம்பாளும், வீற்றிருக்கிறார்கள்.
இக்கோயிலின் கோபுரம் மொட்டை கோபுரமாக உள்ளது கி.பி 12 ஆம் நூற்றாண்டில் குலதுங்க சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும். நுழைவாசலில் நுழைந்தால் கொடி மரமும், இடதுபுறம் இரண்டு வில்வ மரங்கள் ஒரு வேம்பு மரம் பிணைந்து காணப்படுகிறது
இதை சிவா விஷ்ணு மற்றும் அம்பிகை அம்சமாக கருதப்படுகிறது . அதனால் இதை பார்வதி சுயவரம் விருச்சம் என்று பெயர் . கல்யாண தோஷம் நிவர்த்தி செய்ய ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இவ் விருச்சகத்திற்கு பக்தர்கள் பூஜை செய்கின்றனர் .
வால்மீகி மகரிஷி அமர்ந்த நிலையில் அவருக்கு இருபுறம் லவன் , குசன் இருவரும் அவரை வணங்கியபடி இருக்கிறார்கள் . இங்கு சீதை கற்பவதியாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இங்கு வால்மீகி வசித்ததற்கான அடையாளமாக புற்று ஒன்று உள்ளே இருக்கிறது .

அனுமன்,லக்ஷ்மணன் இல்லாத ராமர் மற்றும் சீதா தேவி காட்சியளிக்கிறார் ஏனென்றால் சீதாவை காண ராமர் அரச கோலத்தில் வராமல் மரவுரி தரித்த கோலத்தில் காட்சிதருகிறார் .இக்கோலத்தில் காண்பது மிக அபூர்வம் . இக்கோவிலின் வெளியே லவசதீர்த்ததில் பிற்காலத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் எழுப்பப்பட்டது .
வைகுண்ட பெருமாள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில் காட்சி தருவார் ஆனால் இங்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் . ஸ்ரீதேவி , பூதேவி தாயாரும் நின்றபடியே காட்சிதருகிறார் .
இப்போது நாம் கோயிலை வலம் வந்தால் கனகவல்லி தாயார் சன்னதியை அடையலாம் . தாயாரை வணங்கிவிட்டு நாம் வலம் வந்தால் ஆண்டாள் நாச்சியார் சன்னதியை அடையலாம் .
அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கும் உண்டாகும்படி சிலர் அவதூறாக பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க ராமர் ழுவளை வனத்திற்கு அனுப்பினார். வுனத்திலிருந்து வால்மீகி முனிவர் சீதைக்கு ஆதரவு கொடுத்து தன்னுடன் தங்க வைத்தார். கர்பவதியான சீதைக்கு லவன் குசன் என்ற இரண்டு மகன்களை பெற்றெடுத்தார்.

இச்சமயத்தில் இராமர் அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அஸ்வமேதயாக குதிரை லவகுசர் வசித்த பகுதிக்கு வந்தது. அதை பார்த்த லவகுசர் அவற்றை கட்டிப்போட்டனர். குதிரையுடன் வந்த சத்ருக்கன் குதிரையை விடுவிக்க சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.மேலும் சத்ருக்கனனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த லட்சுமணரையும் வென்றனர். இதையறிந்த ராமன் வனத்திற்கு ஒரு ஒற்றனை அனுப்பி சீதையையும், வால்மீகியையும் அழைத்து வரும்படி செய்தார். அப்போது சீதாதேவி தன் கணவரை மீண்டும் சந்திக்கப்போகும் மகிழச்சியில் இங்கிருந்து கிளம்பிச்சென்றான்.
இதனிடையே வால்மீகி மகரிஷி லவகுசர்களிடம் ராமனே அவர்களது தந்தை என்பதையும், அவர்களது அன்னையே சீதை என்பதையும் எந்தச்சூழ்நிலையில் சீதாதேவியை ராமபிரான் காட்டிற்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார்.
அப்போது தனது சீடர்களான லவகுசர் அறியாமல் சத்ருக்கன், லட்சுமணர் மற்றும் தந்தை இராமனையும் எதிர்த்ததற்கு மன்னிக்கும்படி வேண்டினார். திருமால் அவருக்கு வைகுண்டவாசராக காட்சி தந்து அவர்களை மன்னித்தருளினார்.

இக்கோயில் ராமன் சீதையை அயோத்திக்கு அழைத்தபோது அவர் இங்கேயே வந்ததாக நினைத்துக்கொண்டாள் சீதை, சீதையில் மனக்கண்ணில் இத்தலத்தில் ராமர் எழுந்தருளியதால் இத்தலத்திற்கு ராகபுரம் என்ற பெயரும் உண்டு. லவகுசர் வழிப்பட்ட குறுங்காலீஸ்வரர் இத்தலத்தின் அருகில்; இருக்கிறார். லவகுசர்கள் கோ எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை அயம் என்றும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலம் என்பதால் இத்தலம் கோயம்பேடு என பெயர் பெற்றது.
இங்குள்ள பெருமாள் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். லவகுசர் வழிப்பட்ட தலம். இங்கு கர்ப்பிணி கோலத்தில் சீதை இருக்கிறாள்.
திருமணமான பெண்கள் இங்குள்ள வைகுண்ட வாசபெருமாளை வேண்டினாள் அறிவான ஆண் குழந்தைகள் பிறக்கும் என்பதும், தெரிந்தே தவறு செய்தவர்கள் வேண்டிக்கொள்ள பிராயச்சித்தம் கிடைக்கும் என்பது நம்பிக்கை