கரூர் : தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்விடம் சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட அவர், மாவட்ட அதிகாரிகளிடமும் போலீசாரிடமும் சம்பவ விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார். பொதுமக்களுடன் உரையாடிய அவர், தேவையான உதவிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மத்திய அமைச்சர் எல். முருகனும் உடனிருந்தார்.

















