விடியாத ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக வினர் டிஜிட்டல் மீட்டருடன் சென்று கடந்த ஐந்து ஆண்டுகளாக மின் கட்டணம் மற்றும் வரி உயர்வு விலைவாசி உயர்வு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் வீடு வீடாக நடைபெற்றது
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதர்சன் தலைமையில் அதிமுக வினர் மற்றும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் விடியாத ஆட்சி உங்கள் பில்லே சாட்சி என்ற தலைப்பில் தக்கலை பகுதியில் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் பேருந்திற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகளிடம் அதிமுக முதற்கட்ட தேர்தல் அறிகையான மகளிருக்கு ரேஷன் அட்டைக்கு 2000 ரூ ஆண் பெண் இரு பாலருக்கும் பேருந்து இலவச பயணம் அடங்கிய தேர்தல் வாக்குறியை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் தொடர்ந்து டிஜிட்டல் மீட்டருடன் சென்று கடந்த ஐந்து ஆண்டுகளில் சொத்து வரி உயர்வு,மின் கட்டண உயர்வு உட்பட பல கட்டண உயர்வால் ஐந்து ஆண்டுகளில் எந்த அளவுக்கு விலைவாசி உயர்ந்து உள்ளது என்பதை விளக்கி டிஜிட்டல் மீட்டரில் இருந்து பிரிண்ட் எடுத்து ஒவ்வொரு வருக்கும் விளக்கி கூறி விழிப்புணர்வு செய்தனர் அப்போது செய்தியாளர்களை சந்தித்த மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதர்சன் கூறியதாவது
கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போது நியாயமான விலையில் கிடைத்த பொருட்கள் மூன்று மடங்கு விலை உயர்ந்திருப்பதாகவும் கடந்த ஆட்சியில் இருந்த வரி இந்த ஆட்சியில் வரி உயர்வால் விலைவாசி உயர்வு குறித்து ஒப்பீடு செய்து துண்டு சீட்டு கொடுத்து வீடு வீடாக கடைகள் தோறும் செல்லும் போது மக்கள் இந்த ஆட்சியை அகற்ற உறுதியாக இருப்பதாகவும்
சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நீடிக்கிறது மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர் ஆகவே மக்கள் இந்த ஆட்சி என்று போகும் என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்தார்

















