கூட்டத்தையே மாநாடு போல் நடத்துவது செந்தில் பாலாஜி – உதயநிதி

கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கரூர் வந்தடைந்தார். தொடர்ந்து இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக இளைஞரணி மாவட்ட, ஒன்றிய, பேரூர்,கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்பொழுது முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜியை குறிப்பிட்டு பேசுகையில், கூட்டத்தையே மாநாடு போல் நடத்துவது செந்தில் பாலாஜி.

செந்தில்பாலாஜி போல் அனைத்து மாவட்ட செயலாளர்களும் அமைந்தால் எந்த பிரச்சினையும் இல்லை என கூறினார். அப்பொழுது அரங்கம் முழுவதும் கரவொலி எழுப்பி, திமுக இளைஞரணி நிர்வாகிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Exit mobile version