தீபாவளி பண்டிகையின்போது பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம், ஏனெனில் ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக அதிக எண்ணிக்கையில் பயணம் செய்கின்றனர். இந்த நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் காரணமாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே திருக்கழுக்குன்றம் மதுராந்தகம் செல்லும் பேருந்து சாலையில் கனரக லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விண்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது இதில் உயிர் சேதம் ஏற்படவில்லை ஆனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது இதனால் சென்னையில் இருந்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சென்று கொண்டிருக்கும் மக்கள் விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது இதனால் பல வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இன்றும் நாளை வரை இந்த போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படும் நிலையில் தற்போது இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதால் மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது இதனை காவல்துறை மெத்தனப்போக்கால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தீபாவளி பண்டிகை செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை செங்கல்பட்டு காவல்துறை கண்காணிப்பாளர் சாய் பிரணீத். மெத்தனப்போக்கால் விபத்து நடந்து அதை உடனே சரி செய்யாத காரணத்தால் மக்கள் அவதி
















