எதிரிகள் எத்தனை படை பலத்தோடு வந்தாலும், என்ன வியூகம் வகுத்தாலும் அதற்கு மேலாக வியூகம் வகுக்கும் திறமை திமுக உண்டு. மற்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசாங்கமே கவலைகளுக்கு காரணமாக மாறிவிடும். தமிழகத்தில் திராவிட இயக்கம் என்ற மின்சாரவேலி உள்ளது. ஆபத்து என்பது பல வகைகளில் ஒருவர் வடிவத்தில் வருகின்ற பொழுது, நாட்டு மக்களுக்காக, மொழிக்காக, இனத்திற்காக திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று திருச்சி சிவா மேலூரில் நடைபெற்ற வாக்குமுகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேச்சு…!!
மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக பாக முகவர்கள் கூட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில், மண்டல தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு மேலூர் தொகுதி மேற்பார்வையாளராக நியமிக்க இனம் செய்யப்பட்டுள்ள திருச்சி சிவா எம்.பி., மற்றும் அமைச்சர் மூர்த்தி, தொகுதி பொறுப்பாளர் ஆனந்த் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது..
மேலூர் பகுதி தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கே விளைந்தால், எங்கேயும் விளையும் என்ற பழமொழிக்கு ஏற்ப, இரண்டாவது முறையாக நமது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதிவேற்பதற்கு அச்சாரம் இடும் தொகுதியாக மேலூர் தொகுதி உள்ளது. என்று பேசினார்.
இதனைத்தொடர்ந்து, திருச்சி சிவா எம்.பி பேசும் பொழுது…
நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகள் வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளோம். வரும் தேர்தலில் மேலூர் தொகுதி நமக்கு சாதகமாக இல்லை என்பதை மாற்றி நாம் கழக பணி ஆற்ற வேண்டும். அதற்கான வெற்றியை உறுதி செய்யும் கூட்டமாக இது உள்ளது. எதிரிகள் எத்தனை படை பலத்தோடு வந்தாலும், என்ன வியூகம் வகுத்தாலும் அதற்கு மேலாக வியூகம் வகுக்கும் திறமை திராவிட முன்னேற்ற கழகத்தில் உண்டு.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தால் மக்கள் நிம்மதியாக உறங்கலாம். கவலையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். மற்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசாங்கமே கவலைகளுக்கு காரணமாக மாறி விடும். யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கான திட்டங்களை தீட்டி அதனை நடைமுறைப்படுத்தும் அனுபவம் நம் முதல்வருக்கு உண்டு. தேர்தல் ஆணையர் நியமனத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி என மூவர் இருந்ததை, நம் எதிர்ப்பையும் மீறி, உச்ச நீதிமன்ற நீதிபதியை அகற்றிவிட்டு பிரதமர் தனது சகாக்களில் ஒரு அமைச்சரை தேர்வு குழுவில் நியமனம் செய்து நாடாளுமன்றத்தில் தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை நிறைவேற்றபட்டுள்ளது. இந்த அபாயம் இந்திய ஜனநாயக நாட்டிற்கு சவுக்கரியாக இருந்தது இதை நான் சாவு மணி என்று சொல்ல மாட்டேன் காரணம் மீண்டு எழுவதற்கான சக்தி ஜனநாயகத்திற்கு உண்டு அதை தாங்கிக் கொண்டு நாம் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும். தமிழகத்தில் வேறு தத்துவங்கள் உள்ளே நுழைய முடியாது, காரணம் திராவிட இயக்கம் என்ற மின்சாரவேலி உள்ளது அது தொட்டால் ஷாக் அடிக்கும். மற்றவர்கள் வந்தால் அது ஆலமரம் போல் இருக்கும், சிறுபான்மையினர் இருக்க முடியாது, பாதுகாப்பு இருக்காது. ஆபத்து என்பது பல வகைகளில் ஒருவர் வடிவத்தில் வருகின்ற போது, திமுக வெற்றி பெற வேண்டும் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதை கடந்து, இந்த நாட்டு மக்களுக்காக, மொழிக்காக, இனத்திற்காக, உங்கள் பிள்ளைகளுக்காக இந்த கட்சி (திமுக) ஆட்சிக்கு வரவேண்டும். என்று அப்போது பேசினார்.