மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 108 ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் இராஜ்குமார் மறைந்த பாரத பிரதமர் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், ஏராளமான காங்கிரஸ் கட்சியினரும் மகளிரணியினரும் கலந்துகொண்டு, முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியின் திருஉருவசிலைக்கு அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொள்டாடினர்
















