மயிலாடுதுறையில் இயற்கை விவசாயம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் மரக்கன்றுகள் சாகுபடி செய்து பயன்பெறும் வழிமுறைகள் குறித்து ஈஷா யோகா சார்பில் விவசாயிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் பயிற்சி நடைபெற்றது. மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ஆகியோர் மரக்கன்றுகள் சாகுபடி அதில் ஊடுபயிர் சாகுபடி செய்து வருவாய் ஈட்டும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் இயற்கை விவசாயி ராமலிங்கம், வீரமணி, ராஜசேகரன், அகோரம், சக்திவேல் உட்பட 60க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்துகொண்டனர்…
















