மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரயில் சேவை துவக்கம், ரயில் ஓட்டுநர்கள், மற்றும் ஊழியர்களுக்கு ரயில் பயணிகள் சங்கம் சார்பில், சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம் :-

மயிலாடுதுறையில் இருந்து, பேரளம் திருநள்ளாறு வழியாக காரைக்காலுக்கு சென்ற ரயில் பாதை கடந்த 1986 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பாதையில் அகல ரயில் பாதை மாற்றும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, காரைக்கால் மார்க் துறைமுகத்திலிருந்து, நிலக்கரி சரக்கு ரயில் போக்குவரத்து மட்டும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று முதல் இப்பாதையில் ரயில் போக்குவரத்து துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது, அதன்படி மயிலாடுதுறையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பயணிகள் ரயில் இன்று மாலை 4.40மணி அளவில் புறப்பட்டு சென்றது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்படுவதற்கு மயிலாடுதுறை பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளது. இன்று ரயில் புறப்பட்டதை முன்னிட்டு, ரயில் ஓட்டுநர் உதவி ஓட்டுநர், காவல்துறையினர் மற்றும் ஊழியர்களுக்கு மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் சார்பில், சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது. நீண்ட வருடங்களுக்கு பிறகு ரயில் பயணம் துவங்கியதை முன்னிட்டு, ரயில் பயணிகள் சங்கம் சார்பில் வேளாங்கண்ணி வரை ரயிலில் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ரயில் தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version