பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் படும் போக்குவரத்து நெரிசல்.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் லட்சக்கணக்கான மக்களால், ஜி.எஸ்.டி. சாலை (GST Road கிளாம்பாக்கம், சிங்கப்பெருமாள் கோவில் பரனூர் சுங்கச்சாவடி, செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, செங்கல்பட்டு தூக்கத்துறை மற்றும் மாமண்டூர் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது அனைத்து வாகனங்களும் ஆமை வேகத்தில் செல்கின்றது தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் இந்த போக்குவரத்து நெரிசலானது ஏற்படுவது வழக்கம் இதனை கட்டுப்படுத்த காவல்துறை மாற்று பாதைகளில் வாகனங்களை அனுப்பி வைத்தாள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

















