திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை வட்டத்தைச் சேர்ந்த தாண்டிக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக BSNL மற்றும் ஜியோ டவர்கள் முறையாக செயல்படாதது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இயல்பான கைபேசி சேவை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல், மலைப்பகுதி முழுவதும் கடும் அவஸ்தை நிலவுகிறது. உயிர் அவசரங்கள், மருத்துவத் தேவை, அவசர அரசு சேவைகள் என அனைத்தும் தொலைத்தொடர்பு துண்டிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசுத் துறைகளில் இணையமும், மொபைல் நெட்வொர்க் வசதியும் இல்லாததால் அவசரக் கோப்புக்கள் முதல் முக்கிய நிர்வாக பணிகள் வரை நிறுத்தப்பட்டுள்ளன என்று உள்ளூர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தாண்டிக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கணேஷ்பாபு தனது நிலை மையை விளக்கும்போது, “இரண்டு நாட்களாக டவர் கிடைக்கா ததால், நாங்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இன்று மதியம் வத்தலக்குண்டு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தான் அரசுக்கும், நமது திண்டுக்கல் MP தோழர் சச்சிதானந்தம் அவர்களுக்கும் WhatsApp மூலம் புகார் அனுப்ப முடிந்தது” என்று வருத்த மடைந்தார். “அரசு அலுவலகங்களில் எந்தப் பணியும் நடைபெற முடியாத நிலை” என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பு, குகை வடிவ மலைப்பகுதி, வானிலை மாற்றங்கள் போன்றவை தாண்டிக்குடி பகுதி நெட்வொர்க்கில் தடங்கல் ஏற்படுத்துவது இயல்பு.
ஆனால், இப்போது இரு நாட்களாக தொடர்ச்சியான கோளாறு ஏற்பட்டிருப்பது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற பிரச்சனைகள் கடந்த சில மாதங்களாக அடிக்கடி ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திண்டுக்குடல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சச்சிதானந்தம் MP உடனடியாக BSNL மற்றும் ஜியோ நிறுவன அதிகாரிகளிடம் பேச வேண்டும், தாண்டிக்குடியில் புதிய BSNL டவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மலைப்பகுதியில் தொடர்பு வசதி இடையூறு இல்லாமல் இயங்க நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தாண்டிக்குடி, பேரும், ஊர்தேவர்கோவில், கும்பூர் போன்ற பகுதிகள் மொபைல் நெட்வொர்க் தடங்கலுக்கு அடிக்கடி முகங்கொடுக்க வேண்டியிருப்பதால், “இந்த முறை அரசு நிரந்தர தீர்வாக புதிய டவர் அமைக்கவேண்டும்” என்று மக்கள் வலியுறுத்து கின்றனர்.

















