திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வில் கடும் போட்டி 40 பேருக்கு மேல் விருப்ப மனு மனு படிவங்களை பார்வையாளரிடம் வழங்கியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வு செய்வதற்கான நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், கட்சியின் பார்வையாளருமான பி.எம்.சந்தீப் கலந்து கொண்டு தகுதியான மாவட்ட தலைவரை தேர்வு செய்வது தொடர்பாகவும் கட்சியினரிடம் கேட்டறிந்தனர். அப்போது, நிர்வாகிகள் கோஷ்டியாக இல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவும் என ராகுல் காந்தி வலியுறுத்தி இருப்பதால் அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மாவட்டத் தலைவர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து இந்த மாவட்டத்தில் வடக்கு, தெற்கு மற்றும் ஆவடி மாநகர தலைவர் பதவிக்கு போட்டியிட ஆர்வத்துடன் பங்கேற்று நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் விருப்ப மனு படிவங்களை பார்வையாளரிடம் வழங்கினர். இந்த விருப்ப மனு படிவங்கள் அடுத்த மாதம் 5-ஆம் தேதி வரையில் பெறப்பட உள்ளதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சந்தீப் பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நோட்டீஸ் அனுப்பாமலேயே நீக்கி பாஜக கூட்டணியை வெற்றி பெற தேர்தல் ஆணையம் உதவி செய்துள்ளதாகவும், SIR-ல் தில்லுமுல்லு நடைபெறுவதாக ராகுல் காந்தி தெரிவித்தும் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கு பதில் அளிக்காமல் அவர்களுக்கு பதிலாக, பாஜக செய்தி தொடர்பாளர்கள் அதை பத்தி கூறுகிறார்கள் எஸ் ஐ ஆர் என்பது பாபா சாகேப் அம்பேத்கர் ஒரு மனிதன் ஒரு வாக்கு, ஒரு வாக்கு வலிமை, ஒரு வாக்கு ஒரு குரல் அதனால் SIR எதிராக காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்த்து வருகிறது. இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளாக பிஜேபி அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்து விட்டார்கள் என அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அகில மாநில செயலாளர் ஏஜிஏ,கிருஷ்ணமூர்த்தி, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகர், முன்னாள் மாவட்ட தலவைவர் ஏ.ஜி.சிதம்பரம், நிர்வாகிகள் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேட்டி : பி.எம்.சந்தீப் – அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர்
















