- தேசிய ஜனநாயக கூட்டணியை வேர் அறுக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். நவம்பர் 14ம் தேதி உண்மை வெளிப்படும் என ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.
- இரு நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு இந்தியாவை தொடர்புபடுத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ள ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
- வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அணைகள் நிரம்பி வழிவதால், நீர்வழித்தடங்கள் ஓரம் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, கடலுார் , செங்கல்பட்டு, விழுப்புரம் , தஞ்சை , கள்ளக்குறிச்சி , மயிலாடுதுறை, திருவாரூர் , திருவள்ளூர் ,ராணிப்பேட்டை ஆகிய ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. - ஹங்கேரிக்கு செல்லும் வழியில், ரஷ்ய அதிபர் புடின் தங்கள் நாட்டு வான்வெளி வழியாக பறந்தால் கைது செய்யப்படுவார் என போலந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
- ஹமாஸ் அமைப்பினர் சரியான நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால் அவர்களின் முடிவு மோசமாகவும், கொடூரமாகவும் இருக்கும், என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
- எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சம் யாருக்கு பொருந்தும் என்ற விளக்கத்தை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வைத்துள்ளவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என தெளிவுபடுத்தப்பட்டதால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய பொறியாளர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.
- சட்ட விதிகளுக்கு புறம்பாக, தேர்தல் நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி சிறையில் அடைக்கப்பட்டார்.
- தமிழகத்தில் அதிகனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
- மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு மக்களைக் காப்போம், ” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

















