- உக்ரைனில் 500க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைனின் முன்னாள் பார்லிமென்ட் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி சுட்டுக் கொல்லப்பட்டார்.
- ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, இன்று(ஆகஸ்ட் 30) சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிக்கு மூளையாக செயல்பட்டு வந்த பாகு கான் என்ற பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இவனை பல ஆண்டுகளாக ராணுவத்தினர் தேடி வந்த நிலையில், ஊடுருவல் முயற்சியின் போது கொல்லப்பட்டான்.
- வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் ஸ்டாலின், மற்ற முதல்வர்களை காட்டிலும் பின் தங்கி உள்ளதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
- ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கும், அவரது மனைவி யோஷிகோ இஷிபாவுக்கு பிரதமர் மோடி கண்கவர் நினைவு பரிசுகளை வழங்கி உள்ளார்.
- ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூரு நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
- உக்ரைன் மோதலுக்கு இந்தியா பொறுப்பல்ல. அமெரிக்க அதிகாரிகளின் தவறான விமர்சனம் தொந்தரவை ஏற்படுத்துகிறது என அமெரிக்க யூதர்கள் அமைப்பு
- முதல்வர் இன்று ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா ? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா என்ற மக்களின் கேள்விக்கு ஸ்டாலின் பதிலளிப்பரா என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
- தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மூப்பனாரின் 24வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தினர்.
- வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
















