- இபிஎஸ் அதிமேதாவித்தன அரசியல் செய்தார். அவர் பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தார் என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
- ‘எஸ்.ஐ.ஆரில் காட்டும் ஆர்வத்தை, ஜாதி வாரி கணக்கெடுப்பு பணியில் காட்ட தமிழக அரசு முன்வரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது’ என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
- ஒட்டு மொத்தமாக சரணடைய தயாராக இருக்கிறோம் என்று கூறி மாவோயிஸ்டுகள் மூன்று மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
- கல்வி நிறுவனங்கள் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறக் கூடாது என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
- அதிபர் டிரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில், ரஷ்யா மற்றும் உக்ரைன் கூறியபடி தினமும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
- பெங்களூருவில் பணி ஓய்வு நேரத்தில் ஹோட்டலில் தங்கி இருந்த போது 60 வயதான சக விமானி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 26 வயதான பெண் துணை விமானி புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அயோத்தி ராமர் கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நாளை (நவ.,25) கோலாகமாக நடைபெற உள்ளது. இதற்காக விழா கோலம் பூண்டுள்ளது . அயோத்தி நகர். ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் கொடியேற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
- கமிஷனுக்காக அதிகாரியை திமுக நிர்வாகிகள் மிரட்டுகின்றனர். கடமையைச் செய்யும் அதிகாரியை மிரட்டும் கமிஷன் மாடல் அரசு என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே துரைசாமிபுரத்தில் 2 பஸ்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.
- அருணாச்சல பிரதேசம் எங்களுக்கு சொந்தம் என்று கூறி, ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய வம்சாவளி பெண்ணை பிடித்து வைத்து சீன அதிகாரிகள் சித்ரவதை செய்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதியுள்ளார்.
















