- இவ்வளவு பெரிய குற்றத்திலிருந்து தப்ப முடியாது என்பது நன்கு தெரியும். ஆனாலும் அதை செய்கிறார்கள் ஏன்? இந்த சம்பவம் முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும் என போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., கொலை சம்பவத்திற்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- கோவை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., அறையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று சத்தியம் செய்யாத குறையாக கூறிய போலீசார், போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
- ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திருமாவளவன், சண்முகம், முத்தரசன் வலியுறுத்தி உள்ளனர்.
- நாட்டிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழகம் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பார்லியில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
- டில்லியில் கர்தவ்ய பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கட்டடத்தில், வெளியுறவு அமைச்சகம் மற்றும் துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்படும். இதனால் அமைச்சகங்களுக்கு புதிய முகவரி கிடைக்க உள்ளது.திருப்பூரில் வரதட்சணை கொடுமையால், திருமணம் ஆன 10 மாதங்களே ஆன இளம்பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விசாரணை நடக்கிறது.
- போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா விதித்துள்ள கெடு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அதிபர் டிரம்ப்பின் தூதர் ஸ்டீட் விட்காப், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார்.
- ரஷ்யாவிலிருந்து யுரேனியம், உரங்களை அமெரிக்கா இறக்குமதி செய்ததாக இந்தியா கூறியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘ எனக்கு எதுவும் தெரியாது’ என அதிபர் டொனால்டு டிரம்ப் பதிலளித்துவிட்டு நழுவி சென்றார்.
- அதிபர் டொனால்டு டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை. அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன் என பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தெரிவித்துள்ளார்.
- எல்லையில் கடும் குளிரிலும் ராணுவ வீரர்கள் நாட்டை காக்கின்றனர். இவர்களை போல நாட்டுக்காக விளையாடும் போது வலியை மறந்துவிட வேண்டும். இந்திய கிரிக்கெட் அகராதியில் இருந்து பணிச்சுமை என்ற வார்த்தையை நீக்க வேண்டும், என கவாஸ்கர் தெரிவித்தார்.